Thursday, January 19, 2012

அமாவாசையில் அன்னாபிஷேகம்!

திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது.

பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment